Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி குறித்து சிந்திக்காமல் பயமின்றி விளையாடுங்கள் - மிஸ்பா உல்-ஹக்

Webdunia
புதன், 14 ஜனவரி 2015 (17:07 IST)
தோல்வி குறித்து சிந்திக்காதீர்கள். உலக கோப்பையில் உற்சாகமாக களம் இறங்கி, பயமின்றி விளையாடுங்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் கூறியுள்ளார்.
 
அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மிஸ்பா உல்-ஹக் தலைமையில் பங்கேற்கிறது. இந்த உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற மிஸ்பா உல்-ஹக் முடிவு செய்துள்ளார்.
 
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்பா, “உலக கோப்பையில் பங்கேற்க தயாராகும் எங்கள் அணி வீரர்களுக்கு நான் சொல்லுவது என்னவென்றால், தோல்வி குறித்து சிந்திக்காதீர்கள். உலக கோப்பையில் களத்தில் பயமின்றி உற்சாகமாக விளையாடுங்கள் என்பது தான்.
 
எனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையை உயர்ந்த நிலையுடன் முடிக்க ஆசைப்படுகிறேன். உலக கோப்பையை வென்றால் அதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது.
 
ஆனால் இப்போதைக்கு, உலக கோப்பையில் நன்றாக ஆட வேண்டும், எனது செயல்பாட்டின் மூலம் அணியின் மற்ற வீரர்களுக்கு உந்துசக்தியாகவும், ஊக்குவிப்பாளராகவும் இருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு” என்று கூறியுள்ளார்.

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

Show comments