இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2025 (14:01 IST)
கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த 18 ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது.. ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவையிரண்டுமே இதுவரைக் கோப்பையை வெல்லாத அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இந்த இரு அணிகளுக்குமே சமமான ஆதரவு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் பெங்களூர் அணியில் கோலி இருப்பதால் அந்த அணி நீண்டகாலமாக கோப்பையை வெல்லாததாலும் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு தரவாய்ப்புள்ளது.

இந்நிலையில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் மனைவிக்கு பிரசவம் நடக்கவுள்ளதை அடுத்து அவர் இங்கிலாந்துக்கு செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஆர் சி பி அணிக்கு நிச்சயம் இறுதிப் போட்டியில் ஒரு பின்னடவை உருவாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

RCB அணியை விற்க நேரம் குறித்த இங்கிலாந்து நிறுவனம்…! அதானி வாங்குகிறாரா?

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

ஏபிடி தயவு செஞ்சு எனக்கு அந்த விஷயத்துல உதவி செய்ங்க… சூர்யகுமார் யாதவ் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments