Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் கடுமையாக மோதிக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் [வீடியோ]

மைதானத்தில் கடுமையாக மோதிக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் [வீடியோ]

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (16:12 IST)
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் மோதலில் ஈடுபட்ட வஹாப் ரியாஸ் - அஹமது ஷெஷாத் ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

 
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று முன்தினம் நடந்தப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் - பெஷாவர் ஷல்மி ஆகிய அணிகள் மோதின.
 
இதில் முதலில் பேட்டிங் செய்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கிராண்ட் எல்லியாட் 29 பந்துகளில் 40 ரன்களும், அஹமது ஷெஷாத் 21 ரன்களும் எடுத்தனர்.
 
பின்னர் ஆடிய பெஷாவர் ஷெல்மி அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிகப்பட்சமாக டேவிட் மலன் 60 ரன்களும், முஹமது ஹபீஸ் 36 ரன்களும் எடுத்தனர்.
 
இதற்கிடையில், குவெட்டா கிளாடியட்டர்ஸ் அணி விளையாடிய பொழுது தொடக்க வீரர் அஹமது ஷெஷாத் 21 ஓட்டங்களில், வஹாப் ரியாஸ் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுக்க வெளியேறினார்.
 
அப்போது வஹாப் ரியாஸ், ஷெஷாத்தை நோக்கி ஏதோ சொல்ல, அஹமது ஷெஷாத்தும் தனது பேட்டை உயர்த்தி ஏதோ பேசியபடி வந்தார். பின்னர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டனர்.
 
வீரர்களின் செயலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டி கட்டணத்தில் இருந்து ஷெஷாத்துக்கு 30 சதவீதமும், வஹாப் ரியாஸுக்கு 40 சதவீதமும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

வீடியோ கீழே:
 

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

Show comments