தவறுகளை விரைவாக சரிசெய்வோம்… தோல்விக்குப் பின்னர் பேசிய பேட் கம்மின்ஸ்!

vinoth
புதன், 22 மே 2024 (07:04 IST)
நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணி வழக்கமாக ஆடும் அதிரடி ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்த முடியவில்லை.

இந்த இலக்கை துரத்தி ஆடிய கொல்கத்தா அணி  ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 14 ஆவது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த தோல்விக்குப் பிறகு பேசிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் “சீக்கிரமே நாங்கள் இதில் இருந்து மீளவேண்டும். அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. டி 20 கிரிக்கெட்டில் சில நாட்கள் நாம் நினைப்பது போல எதுவுமே நடக்காமல் போய்விடும்.  நாங்கள் நினைத்தபடி இன்று பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் விளையாட முடியவில்லை. கேகேஆர் மிகச்சிறப்பாக பந்துவீசினார்கள். நாங்கள் அடுத்த போட்டியை புதிய மைதானத்தில் விளையாடப் போகிறோம். அதனால் நாங்கள் இதிலிருந்து மீளவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments