Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா: ஜூனியர் இந்திய அணி அபாரம்

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2016 (17:56 IST)
வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரை இறுதிக்கு நுழைந்துள்ளது.


 
 
நமிபியா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, அரை இறுதிக்குள் நுழைந்தது.
 
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. இந்திய வீரர் ரிஷாப் பண்ட் சதம் விளாசினார். கடைசி நேரத்தில் 21 பந்துகளில் 41 ரன் குவித்தார் லொம்ரர். நமிபியா வீரர் சியோட்சி 3 விக்கெட் வீழ்த்தினார்.
 
பின்னர் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய நமிபியா அணி, இந்திய பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சிதறுண்டு போனது. அந்த அணி 39-வது ஓவரில் 152 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.
 
அந்த அணியில் அதிகபட்சமாக டவின் 33 ரன்கள் சேர்த்தார். நமிபியா அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் ஆட்டமிழந்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் மயாங் டகர் மற்றும் அமோல்ப்ரீட் சிங் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
 
காலிறுதி ஆட்டத்தில் 197 ரன்கள் வித்தியாசத்தில் நமிபியாவை வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

Show comments