Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும்…” சோயிப் அக்தர் கருத்து!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (08:43 IST)
உலகக்கோப்பை டி 20 தொடர் இன்னும் 12 நாட்களில் தொடங்க உள்ளது. அதற்காக ஒவ்வொரு அணியும் தயாராகி வருகிறது.

டி 20 கிரிக்கெட்டில் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் அணிகளில் பாகிஸ்தான் அணியும் ஒன்று. தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த அணி மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் “பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் மோசமாக உள்ளது. தொடக்க வீரர்கள் சரியாக விளையாட வில்லை என்றால் அவர்கள் சொதப்பி விடுகிறார்கள். இதனால் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே இருந்து கூட வெளியேறிவிடும். உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என நினைத்தால் இப்படி ஒரு அணியோடு செல்ல கூடாது” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

'டே பாதர் என்னடா இதெல்லாம்'… தந்தையை ஜாலியாகக் கலாய்த்த அஸ்வின்!

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments