Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்க வேண்டும்.. ஏன் என்றால்? - இந்திய முன்னாள் வீரர் கருத்து!

Prasanth Karthick
ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (09:28 IST)

இன்று ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று முக்கியமான போட்டியான இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் - நியூசிலாந்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்தது.

 

இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன் கூறியுள்ளார். “இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் இந்த தொடர் முழுவதும் சுவாரஸ்யமாக இருக்கும். அதோடு இந்த தொடரில் சமமான போட்டியும் ஏற்படும். இந்திய அணியை பொறுத்தவரை சிறப்பான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

 

பாகிஸ்தான் இந்த இரண்டாவது போட்டியிலும் தோற்றுவிட்டால் அடுத்தடுத்து அரையிறுதி வரை செல்லாது என்பதாலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி சுவாரஸ்யம் தொடரின் இறுதி வரை நீடிக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்.. இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்… கோலிக்கு அறிவுரை சொல்லும் ஹர்பஜன்!

இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லாது… பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆருடம்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்… மீண்டும் தொடங்கிய சர்ச்சை!

அப்பா என் கூடவே இருக்கிறார்… அவருக்குதான் அந்த பறக்கும் முத்தம் – ஷமி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments