Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’லேடி விராட் கோலி’யை பார்த்ததுண்டா: வைரலாகும் புகைப்படம்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (12:46 IST)
இந்திய அணியின் ரன் குவிக்கும் இயந்திரம் என்று அழைக்கப்படும் விராட் கோலியைப் போன்றே பாகிஸ்தானை பெண் ஒருவரின் தோற்றம் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 
இந்திய அணியின் ரன் குவிக்கும் இயந்திரம் என்று ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். கிரிக்கெட் பல மகத்தான சாதனைகளை தொடர்ந்து புரிந்த வண்ணம் உள்ளார்.
 
தவிர, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஆளுமை செலுத்தும் ஒரு அபாயகராமான வீரராக விராட் கோலி திகழ்கிறார். இதனால், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் வீரராக அவர் உள்ளார்.
 

 
இதனால், விளையாட்டில் மட்டுமல்லாமல் தோற்றம் மற்றும் ஸ்டைல்களிலும் விராட் கோலியை அவரது ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர். அண்மையில் கூட நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி இருந்ததைக் கண்டு அவரது ரசிகர்கள் உண்மையான கோஹ்லி என ஆட்டோகிராப் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
 
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், விராட் கோலி போல் தோற்றத்தைக் கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அலி இமான் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இதை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

Prison break சீரியல் கதாநாயகனின் ஸ்டைலைப் பின்பற்றும் ரஷீத் கான்!

இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ… ஏன் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments