Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அசிங்க படுத்திய ரசிகர்கள் (வீடியோ இணைப்பு)

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அசிங்க படுத்திய ரசிகர்கள் (வீடியோ இணைப்பு)
, செவ்வாய், 29 மார்ச் 2016 (14:38 IST)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவுடன் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி நாடு திரும்பியது. அப்போது விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் வீரர்களை அசிங்கப்படுத்தினர்.


 
 
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும் என அந்நாட்டு ரசிகர்கள் வெகு காலமாக காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தும் என அந்நாட்டு ரசிகர்கள் பெரும் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தியாவிடம் படு தோல்வியடைந்தது பாகிஸ்தான்.
 
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் டிவி பெட்டிகளை தெருவில் போட்டு உடைத்தும், வீர்களுக்கு எதிராக கோஷமிட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் நாடு திரும்பிய பாகிஸ்தான் வீரர்களுக்கு மோசமான வரவேற்பை அளித்தனர் அந்நாட்டு ரசிகர்கள்.
 
லாகூர் விமான நிலையத்தில் வீரர்களை காண நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பொதுவாக வீரர்களை வாழ்த்தவே விமான நிலையத்தில் ரசிகர்கள் வருவார்கள். ஆனால், பாகிஸ்தான் வீரர்களை திட்டி தீர்க்கவே ரசிகர்கள் குவிந்திருந்தனர். வீரர்கள் வெளியே நடந்து சென்றபோது, இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள், அவர்களை பார்த்து, ஷேம், ஷேம் என சத்தமாக கோஷமிட்டனர்.
 
 

 
ஷேம், ஷேம் (அசிங்கம்) என சொந்த நாட்டு ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இந்த வீடியோவை தங்கள் மொபைல் போனில் படம் பிடித்த ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil