Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் ஸ்பெஷாலிட்டியே இதுதான்… புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:12 IST)
கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்திறனில் சோடையாக காணப்பட்டு வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு அதை மீட்டெடுத்தார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரராக இருந்தார்.

அந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்து விளையாடிய அவரின் இன்னிங்ஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. அந்த போட்டியில் இக்கட்டமான ஒரு நிலைமையின் போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசினார். இந்த இன்னிங்ஸ் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஷதாப் கான் கோலி பற்றி பேசும் போது “எந்த சூழ்நிலையில் இருந்தாலும், எந்த அணியாக இருந்தாலும் இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியும் என்பதே விராட் கோலியின் தனிச்சிறப்பு” எனக் கூறி புகழ்ந்துள்ளார். இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் விராட் கோலிக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments