Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோதா கமிட்டி பரிந்துரை தரத்தைப் பாதிக்கும் - சர்ச்சை கிளப்பும் கவாஸ்கர்

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2017 (13:20 IST)
லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தினால், ரஞ்சிப் போட்டிகளின் தரத்தைப் பாதிக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.


2013-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை சீரமைக்க, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

இக்குழு 2016-ம் ஆண்டு தனது பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்தில் அளித்தது. பிசிசிஐ-யில் அங்கம் வகிக்கும் மாநிலங்களுக்கு தலா ஒரு வாக்குரிமை மட்டுமே வழங்கப்பட வேண்டும்; 70 வயதுக்கு மேற்பட்டோர் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் பதவி வகிக்கக் கூடாது.

தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடாது; அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், குற்ற தண்டனை பெற்றவர்கள், 9 வருடங்களுக்கு மேலாகவும் பதவியில் இருப்பவர்கள் ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தின் எந்த ஒரு பதவியிலும் இருக்கக் கூடாது என்பவை உள்ளிட்டவற்றை லோதா குழுவின் பரிந்துரைத்தது.

தற்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன. குஜராத்தில் மூன்று சங்கங்கள் உள்ளன. லோதா கமிட்டியின் ஒரு மாநிலத்திற்கு, ஒரு வாக்கு என்ற பரிந்துரையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மூன்று சங்கங்கள் கலைக்கப்பட இருக்கிறது. இதேபோல் மேகாலயா மற்றும் நாகலாந்து போன்ற மாநிலங்களுக்கு புதிய உறுப்பினர்கள் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், ‘‘ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பதில் என்ற பிரச்சினையும் இல்லை. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் முதல்தர கிரிக்கெட்டிற்கு இன்னும் தயாராகாத நிலையில் அவர்களை ரஞ்சி டிராபிற்கு கட்டாயம் அனுமதிக்கக்கூடாது.

ஏனென்றால், அது காட்டாயம் ரஞ்சி டிராபியின் தரத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும். உதாரணத்திற்கு மேகாலயா மற்றும் நாகலாந்து போன்ற மாநிலங்களில் சிறப்பான கிரிக்கெட் விளையாடுவதற்கான அடிப்படை வசதிகள் இல்லை. அப்படியிருக்கும்போது தரமான கிரிக்கெட்டை நீர்த்துப் போகச் செய்யும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments