Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"ஆஸ்திரேலியா இந்திய அணியை நிச்சயம் வீழ்த்தும்" - மேத்யூ ஹைடன்

, புதன், 25 மார்ச் 2015 (19:00 IST)
ஆஸ்திரேலியா இந்திய அணியை நிச்சயம் வீழ்த்தும் என முன்னாள் அதிரடி வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
 
நாளை வியாழக்கிழமை [26-03-15] அன்று சிட்னி மைதனாத்தில் இரண்டாவது மற்றும் கடைசி அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி வரும் 29ஆம் தேதி நியூசிலாந்துடன் மோதும். அதில் வெல்லும் அணி உலகக்கோப்பையை தக்கவைக்கும்.
 
இந்நிலையில், இந்த போட்டி குறித்து கூறிய மேத்யூ ஹைடன், “நிச்சயமாக ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வெல்லும் என நினைக்கிறேன். இந்திய அணியின் என்னை பாதித்துள்ளது. ஸ்பின்னர்களுக்கு சாதகமான சிட்னி மைதானத்தில், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் பெரிய பங்களிப்பு செலுத்துவார்கள்.
 
இந்த தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் இதுவரை சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், இந்திய பந்துவீச்சின் லட்சனம் இன்னும் சரியாக வெளிப்படவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும்போது வெளிப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன்.
 
பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னாவு, தோனியும் பெரிய பங்களிப்பு செலுத்துவார்கள். ஆஸ்திரேலியாவினர் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், இந்த இருவர்கள் பயங்கரமானவர்கள்.
 
இந்திய அணியினர் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிக்களுக்கும் சரிசமமாகவே அழுத்தம் ஏற்படும். ஆனால் கடந்த கோடையில் இந்தியா அனைத்து ஆட்டங்களிலும் தோற்றிருந்தனர்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil