Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் பிளவு இல்லை - சவுரவ் கங்குலி

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2015 (09:39 IST)
நமது இந்திய அணியில் எவ்வித மோதலோ கருத்து வேறுபாடோ ஏதும் ஏற்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி கூறியுள்ளார். 
இந்திய அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் கோலி தலைமையிலான டெஸ்ட் தொடர் டிரா ஆனாது. பின்னர் கேப்டன் தோனியின் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகள் அரங்கேறியது. இதில் வங்க தேச அணி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. 
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி மீதும் கேப்டன் தோனியின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இந்திய அணியில் ஒற்றுமை இல்லை என ஒரு தரப்பு கருத்தும் நிலவி வருகிறது. 
 
இந்நிலையில் இச்சூழல் குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணி தோல்வி பாதையில் செல்லும் போது இது போன்ற சில சர்ச்சைகள் அரங்கேறிவிடுகின்றன. வீரர்கள் களத்தில் முழு திறமையை பிரதிபலிக்காததால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்திய அணியில் எவ்வித மோதலும் இல்லை என கூறியுள்ளார்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments