Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாஸ் ஐயருக்கு இப்போது எந்த அறிவுரையும் தேவையில்லை… மும்பை அணிக் கேப்டன் ரஹானே கருத்து!

vinoth
சனி, 2 மார்ச் 2024 (07:05 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிறு பிரச்சனைகள் இருந்ததால் பெங்களூருவில் இருந்த தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகள் மேற்கொண்டார்.

அங்கு அவர் உடல் தகுதி பெற்று விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலியை காரணம் காட்டி அவர் ரஞ்சி கோப்பையில் இருந்து விலகினார். ஆனால் அவர் பொய் சொல்லி ரஞ்சி கோப்பை விளையாடாமல் ஓடி ஒளிகிறார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ அறிவித்த வருடாந்திர ஒப்பந்தத்தில் அவர் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இதனால் இப்போது அவர் இறங்கி வந்து ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாட வந்துள்ளார். அரையிறுதியில் போட்டியில் அவர் தமிழகத்துக்கு எதிரான போட்டியில் விளையாட வுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மும்பை அணியின் கேப்டன் ரஹானே “ஸ்ரேயாஸ் மீண்டும் அணிக்குள் வந்திருப்பது கூடுதல் பலம். அவர் எப்போதும் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். இப்போது அவருக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

அடுத்த கட்டுரையில்
Show comments