இன்று மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி… முதல்முறையாகக் கோப்பையை வெல்லப் போவது யார்?

vinoth
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:14 IST)
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்டத்தில் இருக்கும் இந்த தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு நடக்கவுள்ளது.  இந்த போட்டியில் நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதால் இதில் யார் வெற்றி பெற்றாலும் முதல் முறை கோப்பையை வெல்லும் அணியாவார்கள். இதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும், ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments