கோலி விக்கெட் எனக்குதான்! – சொல்லி வைத்து களம் இறங்கும் பவுலர்!

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (09:34 IST)
இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதுதான் எனது இலக்கு என நியூஸிலாந்து பவுலர் ட்ரெண்ட் பவுல்ட் கூறியுள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த நியூஸிலாந்து வீரர் ட்ரெண்ட் பவுல்ட் இந்தியாவுக்கு எதிரான நியூஸிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அணியில் இணைந்துள்ள ட்ரெண்ட் ”இந்த ஆட்டத்தில் கோலியை வீழ்த்துவதுதான் எனது இலக்கு. அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விராட் கோலி எவ்வளவு சிறந்தவர் என்பதை நாங்கள் அறிவோம். இந்திய வீரர்கள் பலர் தரவரிசையில் முன்னணியில் உள்ளனர். அவர்களோடு விளையாடுவதால் எங்கள் திறன் அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி வீரர்களின் கால் செருப்புக்கு கூட நாங்கள் சமம் இல்லை. கைகுலுக்காமல் சென்றது சரிதான்: பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்,..

ஹாரிஸ் ரவுஃப் ஒரு 'ரன் மெஷின்.. இதை நான் மட்டும் சொல்லவில்லை.. பாகிஸ்தானே சொல்கிறது: வாசிம் அக்ரம் கடும் தாக்கு!

இந்தியாவுக்கு போட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தான்.. பாகிஸ்தான் ஒரு போட்டி அணியே இல்லை: ஹர்பஜன் சிங்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் இந்த இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவாரா?

என்னிடம் இருந்து வெளிப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்… ஆட்டநாயகன் திலக் வர்மா பெருமிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments