Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊன்றுகோல் உதவியோடு நடக்கும் நாதன் லயன்… ஆஸி அணிக்கு பெரும் பின்னடைவு!

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (07:39 IST)
ஜூன் 29 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் ஆஸி அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தின் மூலம் 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி பேட் செய்யும் போது ஆஸி அணியின் முக்கிய பவுலர் நாதன் லயனுக்கு வலது காலில் அடிபட்டது. அதனால் அவர் களத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இப்போது அவர் ஊன்றுகோல் உதவியோடு நடந்துவரும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதனால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாதன் லயனுக்கு இது 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். அவர் அறிமுகமானதில் இருந்து ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட மிஸ் செய்யாமல் 100 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments