Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வீரர் உலகக் கோப்பை அணியில் இல்லாதது எனக்கும் வருத்தம்தான்… நடராஜன் கருத்து!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (08:27 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்த முறை உலகக் கோப்பை அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெறவில்லை.  கடைசியாக 2003  ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் தமிழக வீரர்கள் யாரும் இடம்பெற்றிருக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர் இல்லாமல் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பவுலரான நடராஜன் “குறைந்தபட்சம் ஒரு தமிழக வீரராவது அணியில் இருப்பார். ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. ஸ்போர்ட்ஸில் இது நடக்கும்தான்.  அஸ்வினும் இல்லை. எல்லோரையும் போல இது எனக்கும் வருத்தமாகதான் உள்ளது” எனக் கூறியுள்ளார். இந்திய அணியில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தும் நடராஜனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments