Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் எங்கு தொடங்கியதோ, அங்கேயே திரும்ப வந்திருக்கிறேன் – பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்த நடராஜன்!

vinoth
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (14:25 IST)
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் பிரகாசித்து பின்னர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதற்கு அவரின் காயமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இப்போது மீண்டு வந்துள்ளார். தற்போது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவர் இந்திய அணியில் ஆடத்தகுதியான வீரராக இருந்தபோதும் அவருக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் தேர்வுக்குழுவில் அரசியல் நடப்பதாகவும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடராஜன் தற்போது தான் படித்த அரசு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து “எல்லாம் எங்கு தொடங்கியதோ அங்கேயே திரும்பியதில் மகிழ்ச்சி. என்னை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு அரசு மேனிலைப் பள்ளி, சின்னப்பம்பட்டிக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments