Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டார்க் போட்ட பந்து கண்ணுக்கே தெரியல… நடராஜன் கலகல பேச்சு!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (09:25 IST)
இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ள நடராஜன் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகிறார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. முன்னதாக டி20 போட்டிகள் மூலம் பிரபலமடைந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயண ஆட்டத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் புகழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்போது வீரர்களின் காயத்தால் அவருக்கு டெஸ்ட் அணியிலும் இடம் கிடைத்து முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் கிடைத்துள்ளன. அதே போல மற்ற அறிமுக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.

இதையடுத்து மூத்த வீரர் அஸ்வின் இவர்கள் மூவரையும் நேர்காணல் செய்தார். அப்போது பேட்டிங் பற்றி பேசிய நடராஜன் ‘ஸ்டார்க் வீசிய முதல் பந்து கண்ணுக்கே தெரியவில்லை’ எனக் கூறி சிரித்தார். முதல் இன்னிங்ஸில் நடராஜன் 1 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments