அர்ஜுன் டெண்டுல்கரை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் ஆர்வம்.. !

vinoth
வியாழன், 13 நவம்பர் 2025 (08:25 IST)
இந்தியக் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அப்பாவின் வழியில் கிரிக்கெட்டைத் தேர்வு செய்து ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் இதுவரை எந்த சீசனிலும் அவருக்கு முழுமையாக விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை.  அதே போல விளையாடிய போட்டிகளிலும் கூட அவர் முழுமையாக 4 ஓவர்கள் பந்துவீசவே இல்லை.

இதனால் கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அர்ஜுன் டெண்டுல்கர் போராடி வருகிறார். இதற்காக உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை டிரேட் செய்ய முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அவரை 2 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ஷர்துல் தாக்கூரைப் பெற்றுக்கொண்டு டிரேட் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக அணிகளுக்குள் டிரேடிங் பேச்சுவார்த்தைகள் அதிகளவில் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அர்ஜுன் டெண்டுல்கரை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் ஆர்வம்.. !

நான் வேணும்னா அத செய்யுங்க…ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிபந்தனை விதித்த ஜடேஜா!

ஜடேஜா சம்மதித்தால் மட்டுமே அணி மாற்றப்படுவார்: ஐபிஎல் 2026 புதிய விதிகள்..!

உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ள ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!

ஆஹா எல்லா சிம்டம்ஸும் கரெக்டா இருக்கே… ஜட்டுவுடன் செல்ஃபி எடுத்துப் பகிர்ந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments