Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆலோசனைக் கூட்டத்துக்கு தாமதமாக வந்த இஷான் கிஷான்… மும்பை இந்தியன்ஸ் அணி அளித்த வினோத தண்டனை!

vinoth
புதன், 3 ஏப்ரல் 2024 (11:18 IST)
இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளையும் தோற்றுள்ளது புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் அந்த அணி நிர்வாகத்தின் மேலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மேலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து நான்காவது போட்டியிலாவது தங்கள் முதல் வெற்றியை ருசிக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. மும்பை அணி தங்கள் அடுத்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்காக மும்பை திரும்பியுள்ளது மும்பை அணி. அப்போது அந்த அணியின் வீரர் இஷான் கிஷான் சூப்பர் மேன் உடையணிந்து வந்தார். அவர் ஆலோசனைக் கூட்டத்துக்கு தாமதமாக வந்த நிலையில் அவரை சூப்பர் மேன் உடையணிந்து பயணிக்க வேண்டும் என அணி நிர்வாகம் தண்டனையளித்ததாம். அதை ஏற்றுக்கொண்டு அவர் இஷான் இந்த தண்டனையை ஏற்று சூப்பர் மேன் உடையில் பயணம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments