நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தியது மும்பை இன்டியன்ஸ் அணி.
மும்பை இன்டியன்ஸ்- ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 27 ஆவது போட்டி மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
மும்பையைச் சேர்ந்த பென் டங்க்- சி.எம். கௌதம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டங்க் 15 ரன்னிலும், கௌதம் 30 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த ரோகித் சர்மா 35 பந்தில் 59 ரன் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இவரது ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் குவித்தது.
பின்னர் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியைச் சேர்ந்த படேல்- கெய்ல் களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 5.1 ஓவரில் 53 ரன்கள் எடுத்தனர். படேல் 19 பந்தில் 26 ரன் எடுத்தார். அடுத்து வீராட் கோலி வந்தார். கெய்ல் 38 ரன்னில் ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த டி வில்லியர்ஸ் 9 ரன்னில் அவுட் ஆனார்.
வீராட் கோலியும் 35 ரன்னில் ஆட்டம் இழக்க அதன்பின் வந்த வீரர்கள் சரியாக விளையாடாததால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.