Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய கடைசி ஆட்டம் அங்கேதான் நடக்கும்! – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தோனி!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (09:54 IST)
ஐபிஎல் தொடரில் இந்த சீசனோடு தோனி ஓய்வு பெற உள்ளதாக பேசப்பட்ட நிலையில் இதுகுறித்து தோனி சூசகமாக பதில் சொல்லியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி இந்திய அணி போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு அறிவித்துவிட்ட நிலையில் தற்போது ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசன்தான் தோனி விளையாடும் கடைசி சீசன் என பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து சூசகமாக பதில் சொல்லியுள்ள தோனி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டம் சென்னையில்தான் நடக்கும் என கூறியுள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடப்பதால் தான் அடுத்த ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்பதை தோனி சூசகமாக சொல்லியுள்ளதாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா ஸ்டாண்ட் ஆப் காமெடியனா போகலாம்! - ஆஸி முன்னாள் வீரர் கடும் விமர்சனம்!

இதுவே தமிழ்நாடு ப்ளேயர் பண்ணிருந்தா தூக்கியிருப்பாங்க! - கில் பேட்டிங் குறித்து பத்ரிநாத் கடும் விமர்சனம்!

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments