Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக விரைவில் நம்பர் 1 – தோனியின் சாதனையை முறியடித்த முகமது சிராஜ்!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (08:49 IST)
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு நாள் பவுலர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.

கடந்த சில ஒருநாள் தொடர்களில் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டில் 20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்களை வீழ்த்தியுள்ள சிராஜ் 729 புள்ளிகளோடு ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

21 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடியுள்ள சிராஜ் இந்த மைல்கல்லை எட்டியதன்  மூலம் குறைந்த போட்டிகளில் விளையாடி ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 38 இன்னிங்ஸ்கள் விளையாடி ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

Prison break சீரியல் கதாநாயகனின் ஸ்டைலைப் பின்பற்றும் ரஷீத் கான்!

இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ… ஏன் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments