ஹர்திக் பாண்ட்யா அணிக்குள் வந்தால் வெளியேறப்போவது இவரா?

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (11:25 IST)
கடந்த வாரம் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். அவருக்கு பதிலாக விராட் கோலி பந்துவீசினார். இன்னும் அவர் காயத்தில் இருந்து மீளவில்லை. அதனால் அவருக்கு பதில் அணியில் சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளார்.

பாண்ட்யாவுக்கு பதில் அணியில் இணைக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாட, நான்காம் இடத்தில் இறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதனால் ஹர்திக் பாண்ட்யா அணிக்குள் வந்ததும் ஸ்ரேயாஸ் ஐயர் பென்ச்சில் உட்கார வைக்கப்படுவார் என்றும் சூர்யாகுமார் யாதவ் அவர் இடத்தில் இறங்குவார் எனவும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஆனால் பாண்ட்யா அணிக்குள் வரும்போது முகமது சிராஜ் வெளியேற்றப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் சிராஜ் மிகவும் சராசரியாகதான் இந்த தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்ட்யா பந்துவீசுவார் என்பதால் சிராஜ் பென்ச்சில் உட்காரவைக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments