டி 20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாட மாட்டாரா முகமது ஷமி?

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2024 (07:53 IST)
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும், இந்தியாவின் ஸ்டார் பந்துவீச்சாளர்களில் ஒருவருமான முகமது ஷமி ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் தற்போது அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் அணிக்கு திரும்புவேன் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் ஜூன் மாதம் நடக்கவுள்ள டி 20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக சிராஜ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

அடுத்த கட்டுரையில்
Show comments