பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி?

vinoth
ஞாயிறு, 23 ஜூன் 2024 (08:20 IST)
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் காயம் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் சுதாரித்த மே.இ.தீவுகள்.. சதத்தை நெருங்கிய கேம்ப்பெல்.. ஹோப் அதிரடி ஆட்டம்..!

ஃபாலோ ஆன் ஆன மேற்கிந்திய தீவுகள்.. 2வது இன்னிங்ஸிலும் விக்கெட் இழப்பு.. தொடர்கிறது குல்தீப் வேட்டை..!

குல்தீப் யாதவ், ஜடேஜா அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுக்களை இழந்தது மே.இ.தீவுகள்..!

4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்.. இந்தியாவுக்கு இன்னொரு இன்னிங்ஸ் வெற்றியா?

டபுள் செஞ்சுரியை மிஸ் செய்த ஜெய்ஸ்வால்.. அதிரடி சதம் அடித்த கில்.. இந்தியா டிக்ளேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments