Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவிர சிகிச்சை பிரிவில் மகள் : அணி வெற்றி பெற விளையாடிய முகமது ஷமி

தீவிர சிகிச்சை பிரிவில் மகள் : அணி வெற்றி பெற விளையாடிய முகமது ஷமி

தீவிர சிகிச்சை பிரிவில் மகள் : அணி வெற்றி பெற விளையாடிய முகமது ஷமி
, புதன், 5 அக்டோபர் 2016 (16:49 IST)
தன் மகள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு கொண்டிருந்த போதும் மனதை கல்லாக்கிக் கொண்டு, அணி வெற்றி பெற விளையாடிய இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது.


 

 
முகமது ஷமிக்கு, ஆயிரா என்ற 14 மாத பெண் குழந்தை ஒன்று உண்டு. அவர் நியுசிலாந்து அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ் போட்டியின் 2வது ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது மகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அக்குழந்தை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டாள். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவரின் குழந்தை 3 நாட்கள் இருந்தது. 
 
இந்த தகவல் முகமது ஷமிக்கு தெரிவிக்கப்பட்டது, அவர் மிகவும் கவலை அடைந்துள்ளார். இதனால், அவரால் விளையாட்டில் சரியாக ஈடுபடாமல் போய்விடுமோ என்று அஞ்சினார். ஆனால், கேப்டன் விராட் கோலி மற்றும் அவரின் சக வீரர்கள் அவரிடம், ஆயிரா விரைவில் குணமடைவாள் என்று ஆறுதல் கூறி அவரது சகஜ நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பின் விளையாட்டில் கவனத்தை செலுத்தியுள்ளார் முகமது ஷபி.

webdunia

 

 
அதன்பின், தினமும் ஆட்டம் முடிந்ததும், இரவு மருத்துவமனைக்கு சென்று, மகளுடன் நேரம் கழித்துவிட்டு, அணியினர் தங்கியிருக்கும் மருத்துவமனைக்கு திரும்பியுள்ளார். தற்போது ஆயிரா, குணமடைந்து வீடு திரும்பி விட்டாள்.
 
அந்த டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் மொத்தம் 3 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டும் என மொத்தம் 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.
 
மேலு, இந்த போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு முகமது ஷமியின் பந்து வீச்சு முக்கிய காரணம் ஆகும். 
 
இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கும் போது “ எனது குழந்தை ஆயிரா, ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்ட போது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஆனால், சக வீரர்கள் கொடுத்த நம்பிக்கை வார்த்தைகளால் தொடர்ந்து களத்தில் விளையாடினேன்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்: கோஹ்லியின் சர்ச்சை கருத்து