முழங்கால் வீக்கத்தால் அவதிப்படும் ஷமி… ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பதில் சிக்கல்!

vinoth
புதன், 2 அக்டோபர் 2024 (16:12 IST)
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் அவர் காயமடைய அவர் கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது. அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஆனால் தற்போது அவர் முழங்கால் வீக்கத்தால் அவதிப்பட்டு வருகிறாராம். இதனால் அவர் மீண்டும் அணிக்கு திரும்ப 8 முதல் 9 வாரங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. இதனால் அவர் ஆஸ்திரேலிய தொடரிலும் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்… கருண் நாயர் ஆதங்கம்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி… கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

உடலுக்குள் தொடரும் ரத்தக்கசிவு! ஐசியுவில் ஸ்ரேயாஸ் ஐயர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஓய்வெல்லாம் அதுக்குப் பிறகுதான்… ரோஹித் ஷர்மாவின் சிறுவயது பயற்சியாளர் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments