Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து குடியுரிமைக்காக வெயிட்டிங்… ஐபிஎல் ஆட ஆசைப்படும் பாக். வீரர்!

vinoth
ஞாயிறு, 9 மார்ச் 2025 (08:10 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் சிறப்பானப் பங்களிப்பை செய்துள்ளது. வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ், சோயிப் அக்தர் ஆகியோர் வரிசையில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகச்சிறு வயதிலேயே (17 வயது) சூதாட்டப் புகாரில் சிக்கி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார் அமீர். பின்னர் நன்னடத்தைக் காரணமாக சீக்கிரமே விடுதலையான அமீர் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடினார்.

அவர் சிறப்பாக பந்துவீசினாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அவருக்கும் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் அவர் 2020 ஆம் ஆண்டு திடீரென அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் டி 20  கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்தாலும், அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.

இந்நிலையில் அவர் தற்போது இங்கிலாந்து குடியுரிமைக்காகக் காத்திருக்கிறார். அவரது மனைவி இங்கிலாந்து குடியுரிமைக் கொண்டவர் என்பதால் அவருக்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்து குடியுரிமைக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களால் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெரினாவில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு.. குடும்பத்துடன் வருமாறு வேண்டுகோள்..!

இன்று இறுதி போட்டி.. சாம்பியன்ஸ் டிராபி கோப்பை யாருக்கு? டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்?

இறுதிப் போட்டியில் இரு அணியிலுமே மாற்றம் இருக்கும்… ரவி சாஸ்திரி கணிப்பு!

RCB அணியில் ஆட விரும்புகிறேன் – பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்!

ஐபிஎல் தொடரிலாவது விளையாடுவாரா பும்ரா?... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments