Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்கள்… மிட்செல் ஸ்டார்க் தொட்ட மைல்கல்!

vinoth
வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:16 IST)
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் கடந்த காலங்களில் தொடர்ந்து மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் என அடுத்தடுத்துக் கலக்கி வரும் ஸ்டார்க், ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் ஸ்டார்க் தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முக்கியமன மைல்கல் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார்.

ஆஸி அணியில் ஷேன் வார்ன், மெக்ராத் மற்றும் பிரட் லி ஆகியோருக்கு அடுத்த இந்த சாதனையைப் படைக்கும் பவுலர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 377 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில் 244 விக்கெட்களும் டி 20 போட்டிகளில் 79 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!

பாலிவுட் நடிகையை ‘டேட்’ செய்கிறாரா சிராஜ்?... தீயாய்ப் பரவும் தகவல்!

ஸ்டீவ் ஸ்மித்தான் இந்த தலைமுறையின் சிறந்த டெஸ்ட் வீரரா?... ரிக்கி பாண்டிங் அளித்த பதில்!

ஐசிசி தரவரிசையில் பல இடங்கள் முன்னேறிய திலக் வர்மா!

காவாஜா, ஸ்மித் அதிரடி சதம்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments