Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் கிளார்க் இடம்பெறுவாரா?

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் கிளார்க் இடம்பெறுவாரா?
, புதன், 26 நவம்பர் 2014 (14:31 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளார்க் பங்குபெறுவாரா என்பதில் தொடர்ந்து சந்தேகம் நீடிக்கிறது.
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள கேப்டன் கிளார்க் முதல் டெஸ்ட் போட்டியில் பங்குபெறுவாரா இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது. தசைப்பிடிப்பு காரணமாக கிளார்க் அவதிப்பட்டு வருவதால் அவர் முழு உடல்தகுதியை எட்டினால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில்
விளையாட முடியும். இதனால் கிளார்க் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் குழப்பத்தில் உள்ளது. 
 
மேலும் இதுகுறித்து தனது நிலைப்பாட்டை கிளார்க் உறுதிப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil