Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெக்கல்லம் 22 பந்துகளில் அரைச்சதம் விளாசல்; நியூசிலாந்து 174/4

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2015 (13:56 IST)
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் 22 பந்துகளில் அரைச்சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
 
உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஈடன் பார்க்கில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 

 
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ரோஸ்ஸோவ் 39, டி வில்லியர்ஸ் 65, டேவிட் மில்லர் 49, டு பிளஸ்ஸிஸ் 82 ரன்கள் குவிக்க 43 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறார்கள். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கல்லம் 22 பந்துகளில் [6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] அரைச்சதம் எடுத்துள்ளார். பின்னர் 59 ரன்களில் வெளியேறினார்.
 
கப்தில் 34 ரன்கள், ராஸ் டெய்லர் 30 ரன்கள் குவித்து வெளியேறினர். தற்போது நியூசிலாந்து அணி 26 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்துள்ளது. எலியாட் (20) மற்றும் ஆண்டர்சன் (18) இருவரும் களத்தில் உள்ளனர்.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments