Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கோலி அந்த இடத்தில் இறங்கவேண்டும்… இல்லையேல் அணியிலேயே இருக்க வேண்டாம்’ – ஆஸி அணி முன்னாள் வீரர் கருத்து!

vinoth
செவ்வாய், 4 ஜூன் 2024 (07:39 IST)
டி 20 உலகக் கோப்பை தொடர் நேற்று முதல் தொடங்கியது. இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அந்த அணியில் இந்திய வீரர் விராட் கோலி விளையாடவில்லை. ஏனென்றால் அவர் அதற்கு முந்தைய நாள்தான் அமெரிக்கா சென்று சேர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபற்றி ரோஹித் ஷர்மா இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யு ஹெய்டன் “கோலி தொடக்க ஆட்டக்காரராகதான் இறங்கவேண்டும். அப்படி இல்லையென்றால் நான் அவரை அணியிலேயே எடுக்க மாட்டேன். ரோஹிட் ஷர்மா பன்முகத்தன்மை கொண்ட வீரர். அவர் நடுவரிசையில் ஆடினால் பேட்டிங் ஆர்டரை தலைமை தாங்கி நடத்தி செல்ல முடியும்” எனக் கூறியுள்ளார்.

பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் ஷர்மாவோடு சஞ்சு சாம்சன் இறங்கியதால் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

வாழ்க்க ஒரு வட்டம்… மீண்டும் சி எஸ் கே அணியில் இணைந்தது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments