Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கோப்பையை வெல்ல தயாராகும் இலங்கை; மலிங்கா தலைமையிலான அணி அறிவிப்பு

மீண்டும் கோப்பையை வெல்ல தயாராகும் இலங்கை; மலிங்கா தலைமையிலான அணி அறிவிப்பு

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2016 (17:52 IST)
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கான லசித் மலிங்கா தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
வருகின்ற மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை, 6ஆவது டி 20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது.
 
குரூப் ‘ஏ’ பிரிவில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும். குரூப் ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் நேரடியாக இடம் பெற்றுள்ளன.
 
வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஹாங்காங், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகளில் 2 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.
 
இந்நிலையில், லசித் மலிங்கா தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணைக் கேப்டனாக ஆஞ்சலோ மேத்யூஸ் செயல்படுவார். 4 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தில்ஹாரா ஃபெர்ணாண்டோ இலங்கை அணிக்குத் திரும்பியுள்ளார்.
 
லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
அணி வீரர்கள் விவரம்:
 
லசித் மலிங்கா (கே), ஆஞ்சலோ மேத்யூஸ் (து.கே.), தினேஷ் சண்டிமால், திலகரத்னே தில்ஷன், நிரோஷன் டிக்வெல்லா, ஷெஹன் ஜெயசூர்யா, மிலிந்த சிரிவர்தனா, தசுன் ஷனகா, சமர குபகேந்திரா, நுவன் குலசேகரா, துஷ்மந்தா சமீரா, திசரா பெரேரா, சசித்ரா செனநாயகே, ரங்கணா ஹெராத், ஜெஃப்ரே வந்தேர்சே

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments