Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியும் தோனி புதிய சாதனை; பாண்டிங் சாதனை சமன்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (16:19 IST)
இந்திய ஒருநாள் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிக சர்வதேச போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் உடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
 

 
நேற்று இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி 20 போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
 
இந்த போட்டி மூலம், ஏற்கனவே இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான மகேந்திர சிங் தோனி, தற்போது அதிக சர்வதேச போட்டிகளில் தலைமையேற்ற கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
 
இதுவரையிலும், 60 டெஸ்ட் போட்டிகளுக்கும், 194 ஒருநாள் போட்டிகளுக்கும், 70 டி20 போட்டிகளுக்கும் என ஒட்டுமொத்தமாக 324 சர்வதேச போட்டிகளில் தோனி கேப்டனாக பொறுப்பேற்று உள்ளார்.
 
இதன் மூலம் அதிக சர்வதேச போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் அவர்களின் சாதனையை தோனி சமன் செய்துள்ளார்.
 
இவர்களுக்கு அடுத்ததாக, நியூசிலாந்து வீரர் ஸ்டீவன் பிளமிங் (303 போட்டிகள்), தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் (286 போட்டிகள்), ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர் (271 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments