Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி 10 - 12 ஓவர்கள் மிகவும் முக்கியமானது - தோனி கருத்து

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2015 (14:51 IST)
விக்கெட் கையில் இருக்கும் போது கடைசி 10 - 12 ஓவர்களில்  நாங்கள் எப்படி பேட் செய்யவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்று இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “ஆட்டத்தின்போது ஓவ்வொரு ஜோடியும் வெற்றிகரமாக விளையாடினாலும், உலகக் கோப்பையில் விளையாடும் 11 பேர் குறித்து உறுதியாக தெரியவில்லை என்றால் அது வெற்றியைப் பாதிக்கிறது.
 
அனைவரும் நல்ல உடல் திறனுடன் இருக்கிறார்கள். முதல் 11 பேர் விளையாடுவார்கள். அடுத்து நிலைமைகளைப் பொறுத்து அடுத்த 11 பேர் சார்ந்து இருக்கலாம். இறுதியில் 15 பேரை திட்டமிட்டு அவர்களில் யார் உடல் தகுதியுடன் இருக்கிறார்கள் என்பதை கவுரமாக தேர்வு செய்யவேண்டும்.
 
ஓவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானதே. அதே சமயம் ரன் விகிதத்தை பாதுகாப்பதும் மிகவும் முக்கியம். விக்கெட் கையில் இருக்கும் போது கடைசி 10 - 12 ஓவர்களில்  நாங்கள் எப்படி பேட் செய்யவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது” என்று கூறியுள்ளார்.

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

Show comments