Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

vinoth
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (10:52 IST)
2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே கோலி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்துள்ளார். அதனால் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள இந்த தொடர் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட்டில் அடித்த ஒரு சதத்தைத் தவிர மற்ற இன்னிங்ஸ்களில் மோசமாக ஆடி சொதப்பி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணி பாலோ ஆன் தவிர்த்து போட்டியை டிரா செய்ய வேண்டுமானால் அடுத்த இன்னிங்ஸிலாவது இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். இந்நிலையில் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி வீரர் கோலி மைதானத்துக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை இந்திய ரசிகர்கள் கைதட்டிப் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments