Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கே போனாலும் அவர் இருக்கிறார்…. தோனி குறித்து கோலி பதிவு!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:44 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரல் ஆகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கோலியும், தோனியும் நெருக்கமான நட்புடையவர்கள். தோனியின் கேப்டன்சியின் கீழ்தான், கோலி, தனது உச்சத்தை தொட்டார். தோனிக்குப் பிறகு, கோலி, இந்திய அணிக்குக் கேப்டனாகி பல சாதனைகளைப் படைத்தார்.

சமீபத்தில் கூட தோனி குறித்து கோலி "நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், ஒருவரிடமிருந்து மட்டுமே எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, அந்த நபர் எம்எஸ் தோனி. வேறு யாரும் எனக்கு செய்தி அனுப்பவில்லை. பலரிடம் எனது எண் உள்ளது. ஆனால் அவர்கள் என்னிடம் பேசவே இல்லை. அவர் மீதான என் மரியாதை உண்மையானது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வாட்டர் பாட்டிலின் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் “எங்கே போனாலும், அவர் இருக்கிறார். வாட்டர் பாட்டிலில் கூட” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments