Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் சாதனையை முந்திய விராட் கோலி !!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:49 IST)
சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி பெற்றுள்ளார். 

 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்கிய மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 
இதனைத்தொடர்ந்து 33 ரன்கள் பின்தங்கி இருந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சிலும் சொதப்பியதால் 81 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை (22 போட்டிகள்) பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் தோனி 21 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments