சச்சினை முந்தி கோலி படைத்த சாதனை…!

vinoth
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:08 IST)
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி.

சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் அந்த டி 20 உலகக் கோப்பையை அமெரிக்காவில் பிரபலப்படுத்த கோலியின் புகைப்படம்தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய வங்கதேச அணிக்கெதிரான இன்னிங்ஸின் போது கோலி மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார். அவர் சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 27000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து பெற்றுள்ளார். சச்சின் 623 இன்னிங்ஸ்களில் படைத்த சாதனையை கோலி 593 இன்னிங்ஸ்களில் செய்துள்ளார். அதிலும் இதில் 100 இன்னிங்ஸ்கள் டி 20 இன்னிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments