Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லிக்கும், வில்லியம்சனுக்கும் 19 வயதிலிருந்தே பகை – ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (14:13 IST)
இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி நியூஸிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஆட்டம் அரையிறுதி ஆட்டம் என்பதால் ரசிகர்கள் தீவிரமான ஆர்வத்தோடு உள்ளனர்.

நியூஸிலாந்தின் கேப்டன் வில்லியம்சனுக்கும், இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கும் 11 வருடத்துக்கு முன்னால் தீராத ஒரு கணக்கு இருக்கிறது. ஒருவகையில் அதை தீர்த்து கொள்வதற்காகவே இந்த மேட்ச் என்று கூட சொல்லலாம்.

2008ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான உலக கோப்பை நடைபெற்றது அதில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் விராட் கோஹ்லி, நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன். இரண்டு அணிகளும் அரையிறுதியில் மோதின. அப்போது தனது அபார திறமையால் 43 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற செய்தார் விராட் கோஹ்லி.

தற்போது 11 வருடங்கள் கழித்து இருவரும் தங்களது டீம் கேப்டன்களாய் அதே போன்ற மற்றொரு அரை இறுதியை எதிர்கொள்கிறார்கள். இதனால் இருவர் பக்கமுமே பலமான ஒரு மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா ஒருநாள், டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார்? பும்ராவுக்கு ஓய்வு..!

அகமதாபாத் டெஸ்ட்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. சதம் மற்றும் 4 விக்கெட் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு திடீர் உடல்நலக்கோளாறு.. கான்பூர் மருத்துவமனையில் அனுமதி..!

டிக்ளேர் செய்த இந்தியா.. 5 விக்கெட்டை இழந்து தோல்வியின் விளிம்பில் மே.இ.தீவுகள்.. இன்னிங்ஸ் வெற்றியா?

டெஸ்ட் போட்டிகளில் முக்கிய சாதனைகளில் தோனியை முந்திய ஜடேஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments