Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட்டிலும் ஓரம்கட்டப்படும் ராகுல்… துணைக் கேப்டன் பொறுப்பு பறிப்பா?

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (09:29 IST)
கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வீரர் கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த 2 போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. ஆனால் இந்திய அணியில் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஃபார்ம் தொடர்ந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான கே எல் ராகுக் மீது கடும் விமர்சனங்கள் எழும் அளவுக்கு அவரின் பார்ம் உள்ளது. கிட்டத்தட்ட 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் சராசரியாக 33 மட்டுமே வைத்துள்ளார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் இந்தளவுக்குக் குறைவான சராசரி யாருக்கும் இல்லை. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இருக்கும் நிலையில் கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்பது ஏற்புடையதில்லை எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸி. அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள நிலையில், கே எல் ராகுலிடம் இருந்த துணைக் கேப்டன் பொறுப்பு நீக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான துணைக் கேப்டன் என பிசிசிஐ யாரையுமே அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments