Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி ராஜினாமா செய்தது எனக்கு ஆச்சர்யம் இல்லை… பீட்டர்சன்!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (11:09 IST)
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியது தனக்கு ஆச்சர்யத்தை அளிக்கவில்லை என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னால் கேப்டன் கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே எழுந்த ஈகோ மோதலின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே நீரு பூத்த நெருப்பாக புகைந்து வந்தது. இந்நிலையில் இப்போது அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பேட்டிங் திறன் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் பீட்டர்சன் அளித்த ஒரு நேர்காணலில் ‘எனக்கு கோலி பதவி விலகியது ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. ஏனென்றால் கோலி போன்ற வீரரை பயோபபுளில் இரண்டு ஆண்டுகள் விளையாட சொல்வது சரியில்லை.கேப்டன் பதவியை பயோ பபுளுக்குள் இருந்துகொண்டு சிறப்பாக செய்ய முடியாது. அதீதமான அழுத்தங்களில் இருந்து தன்னை மீட்கும்வகையில் தன்னை கேப்டன் பதவியிலிருந்து கோலி விடுவித்துக்கொண்டது வியப்புக்குரியது இல்லை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments