Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி & ரோஹித்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கபில் தேவ்!

vinoth
செவ்வாய், 14 ஜனவரி 2025 (10:31 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸி மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவரான கோலி ஒரே ஒரு சதத்தை தவிர மற்ற இன்னிங்ஸ்களில் சொதப்பினார்.

கோலியைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக அவர் ஒரே மாதிரியாக தன்னுடைய விக்கெட்டை இழந்து வருகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில்தான் அவர் அதிகமுறை  கேட்ச் கொடுத்து அவுட் ஆகி  வெளியேறுகிறார். ஆனால் அந்த பந்துகளை அடிக்காமல் விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் முன்னாள் வீரர்கள். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம். அதே நிலைதான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும்.

அதனால் இருவருமே ஓய்வை அறிவிக்க வேண்டும் என பலதரப்பட்ட கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் ஆதரவாக முன்னாள் இந்திய அணிக் கேப்டன் கபில்தேவ் பேசியுள்ளார். அதில் “விராட் மற்றும் ரோஹித் ஆகிய இருவருமே மிகச்சிறந்த வீரர்கள். அவர்கள் இருவரும் எதுவரை விளையாடவேண்டும், எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை நன்றாக அறிவார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி & ரோஹித்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கபில் தேவ்!

யுவ்ராஜ் சிங்கின் தந்தையா இது?... தோனியைப் பாராட்டி பேச்சு!

சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இடம் கிடைக்குமா? ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… தொடருமா கம்மின்ஸின் ‘மிடாஸ் டச்’!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆகவே முடியாதா?...ஹர்திக் பாண்ட்யாவை ஒதுக்கும் தேர்வுக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments