Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள் – கபில்தேவ் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (12:19 IST)
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார்.

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தியாவிற்குள்ளேயே நடைபெறும் இந்த போட்டிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஆனால் அதே சமயம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தொடர்ந்து விளையாடி கொண்டே இருப்பதால் மிகவும் சோர்வடைவதாகவும், இதனால் மற்ற இந்திய ஆட்டங்களில் சிறப்பாக ஆட முடியாமல் போகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ”ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விடவும் இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம். இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளால் சோர்வுற்று விடுவதாக கருதினால் ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments