Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்னாப்ரிக்கா சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு

தென்னாப்ரிக்கா சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (00:18 IST)
தென்னாப்ரிக்காவின் சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

 
தென்னாப்ரிக்காவில், இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தென்னாப்ரிக்காவின் சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில்  தான் ரபடா அறிமுகம் ஆனார். ஆனால், அந்த போட்டியில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆநால் 6 விக்கெட்டுகள் அற்புதமாக வீழ்த்தினார். இதன் மூலம், அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனை சிகரத்தை தொட்டார். மேலும், அறிமுக ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2ஆவதுவீரர் என்ற சாதனையையும் படைத்தார். ரபடா கருப்பினத்தை சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடதக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil