Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்ச நேரம் டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடு… ராகுலுக்கு ப்ளான் போட்டுக் கொடுத்த கோலி!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (06:32 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயா உலக கோப்பை போட்டி பரபரப்பாக நேற்று நடந்த நிலையில் இந்திய அணி கோலி மற்றும் ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி பவுலர்கள் ஆரம்பம் முதல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் வீழ்த்திய விக்கெட்டுகளால் ஆஸ்திரேலிய அணி 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை ஈட்டியது.

இதையடுத்து 200 ரன்கள் என்ற எளிய இலக்கோடு ஆடவந்த இந்திய அணி 2 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. அதன் பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த கே எல் ராகுல் நிதானமாக விளையாடி அதிகபட்சமாக 97 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட ராகுல் பேசும் போது “நான் களத்துக்குள் வரும் போது கொஞ்ச நேரத்துக்கு டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடுவோம் எனக் கோலி கூறினார்” என தெரிவித்துள்ளார். நிதானமாக விளையாடிய கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments