Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

vinoth
புதன், 13 நவம்பர் 2024 (11:53 IST)
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக கே எல் ராகுல் லக்னோ அணியால் கழட்டிவிடப்பட்டுள்ளது முக்கியக் கவனம் பெற்றுள்ளது. கடந்த சீசனில் ஒரு போட்டி முடிந்த போது கே எல் ராகுலை, அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடுமையாக பேசியது வீடியோவாக வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் அதன் பின்னர் ராகுலை சந்தித்து சஞ்சீவ் கோயங்கா பேசியதால் இருவரும் சமாதானம் ஆகியதாக சொல்லப்பட்டது. ஆனாலும் அவரைக் கழட்டி விட்டுள்ளது.

ராகுல் சம்மந்தமாகப் பேசிய சஞ்சீவ் கோயங்கா “நாங்கள் எப்படிப்பட்ட வீரர்களை அணியில் எடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டோம் என்றால் தங்கள் தனிப்பட்ட லாபத்துக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக விளையாடும் தன்னலமற்ற வீரர்களைதான்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராகுல் அவருக்குப் பதிலளிக்கும் விதமாக “சென்னை மற்றும் குஜராத் அணிகளைப் பார்த்தீர்களானால் அவர்கள் வெற்றியோ, தோல்வியோ அதை ஒரே மனநிலையோடு அமைதியாக எடுத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட சூழல்தான் வீரர்களை சிறப்பாக விளையாட வைக்கும். அப்படிப்பட்ட ஒரு அணியில் விளையாடுவதை சிறப்பான விஷயமாக கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments